ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நடை பயணத்தின்போது பேசிய ராகுல்காந்தி, இந்தி திணிப்புக்கு எதிராக பேசிய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி நாடெங்கிலும் மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடை பயணம் தற்போது ராஜஸ்தானை அடைந்துள்ளது. அங்கு அல்வார் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில் புதிதாக 1700 ஆங்கிலவழிப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். “இந்தியாவைத் தாண்டி உலகின் பிற நாடுகளில் உள்ளவர்களுடன் தொடர்புகொள்வதற்கு இந்தி உதவாது. ஆங்கிலம்தான் உதவும். ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் அமெரிக்கர்களுடன் போட்டி போட வேண்டும். அவர்கள் மொழியை பயன்படுத்தியே அவர்களை வெல்ல வேண்டும்” என ராகுல்காந்தி தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படுவதை பாஜக தலைவர்கள் விரும்புவதில்லை, அதே நேரம் அந்த தலைவர்களின் குழந்தைகள் ஆங்கிலவழி கல்வி கற்பிக்கும் பள்ளிகளில்தான் கல்வி பயில்கிறார்கள் என்றும் ராகுல்காந்தி விமர்சித்தார். ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதையும், பெரிய கனவுகளைக் கண்டு அதனை அடைவதையும் பாஜக தலைவர்கள் விரும்பவில்லை என்றும் ராகுல்காந்தி விமர்சித்தார்.