இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் தளபதி 67 குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜய்யுடன் கைக்கோர்த்துள்ளார். இதையடுத்து தளபதி 67 படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் இயக்குனர் லோகேஷ் ஈடுட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த படத்தில் காதல் காட்சிகள், பாடல்கள் எதுவும் இல்லாமல் கைதி படம் போன்று முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. காதல் காட்சிகள், பாடல்கள் இல்லாமல் வெளியாகும் முதல் விஜய் படமாக தளபதி 67 இருக்கும் என திரை வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும், இதுதான் விஜய்யின் முதல் பான் இந்தியா படமாகவும் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா மந்தனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சரத்குமார் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஜய்யின் 67வது படம் பான் இந்தியா படமாக அமையவுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.