கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 13 அமைச்சர்கள் தோல்வி..! அது யார் யார் தெரியுமா?

நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவில் அமைச்சர்களாக இருந்த 13 பேர் தோல்வியடைந்துள்ளனர். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு கடந்த 10-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை…

நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவில் அமைச்சர்களாக இருந்த 13 பேர் தோல்வியடைந்துள்ளனர்.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு கடந்த 10-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில், காங்கிரஸ் கட்சி 136 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. குறிப்பாக, இந்த தேர்தலில் பாஜக ஆட்சியில் இருந்த 13 அமைச்சர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்.

இதில், முக்கியமாக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீராமுலு, வருவாய் துறை அமைச்சர் ஆர்.அசோகா, வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா, சிறு குரு தொழில் வளத்துறை அமைச்சர் எம்டிபி நாகராஜ், விளையாட்டு துறை அமைச்சர் நாராயண கவுடா, விவசாயத்துறை அமைச்சர் பி.சி.பாட்டில் உட்பட 13 அமைச்சர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.

மேலும், தக்ஷனா கன்னடா மாவட்டம் சிர்சி தொகுதியில் போட்டியிட்ட சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டடே கஹேரியும் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.