பிரபல பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவுக்கும் – ஆம் ஆத்மி எம்பியுமான ராகவ் சத்தாவுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
பிரபல பாலிவுட் நடிகை நடிகை பரினிதி சோப்ரா ப்ரியங்கா சோப்ராவின் அத்தை மகள் ஆவார். இவர்கடைசியாக சூரஜ் பர்ஜாத்யாவின் உஞ்சாய் படத்தில் நடித்தார். தற்போது, தில்ஜி தோசன்ஜுடன் சம்கீலா மற்றும் அக்ஷய் குமாருடன் கேப்சூல் கில் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கும் ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா இருவருக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டு அது தொடர்பான நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
Everything I prayed for .. I said yes! 💍
ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਮਿਹਰ ਕਰਨ। 🙏🏻 pic.twitter.com/xREJWjEr7n— Parineeti Chopra (@ParineetiChopra) May 13, 2023
பரினீதியும், ராகவ்வும் சில மாதங்களாகவே டேட் செய்து வந்ததாக வதந்திகள் பரவின. இதையடுத்து இருவரும் காதலித்து வருவதாக சில மாதங்களாக பாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் பரவி வந்தன. இருதரப்புமே இது குறித்து எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. இந்நிலையில், பரினீதி சோப்ராவுக்கும் – ராகவ் சட்டாவுக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
மிக நெருக்கமானவர்கள் மட்டுமே நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இந்த திருமணத்தில் கரண் ஜோகர்,சானியா மிர்சா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொந்தாக கூறப்படுகிறது. திருமண நிகழ்ச்சியில் சிறப்பு உணவு வகைகள் பரிமாறப்பட இருக்கின்றன. இதற்காகவே பிரபலமான சமையல் கலைஞர்கள் அழைக்கப்பட இருக்கிறார்கள்.







