சென்னையில் நேற்று பொதுவெளியில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 2 லட்சத்து 51 ஆயிரத்து 500 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் நேற்று இரவு முதல் பொது ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது. இந்த நிலையில், பொதுவெளியில் முகக்கவசம் அணியாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்த நிலையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 1,291 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 8-ம் தேதியிலிருந்து இதுவரை முகக்கவசம் அணியாத 14,611 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 8-ம் தேதியிலிருந்து இதுவரை முகக்கவசம் அணியாதவர்களிடம் 28 லட்சத்து 7 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.







