12,838 கவுன்சிலர்கள் இன்று பதவியேற்பு

அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப் பெற்ற 12 ஆயிரத்து 838 வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி…

அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப் பெற்ற 12 ஆயிரத்து 838 வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற்றது.

இதில் 12 ஆயிரத்து 838 வார்டு கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மொத்தம் உள்ள 1,373 மாநகராட்சி வார்டுகளில் 4 வார்டுகளில் போட்டியின்றி கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதேபோல நகராட்சி வார்டுகளில் 3 ஆயிரத்து 825 கவுன்சிலர்களும், 18 வார்டுகளில் போட்டி இல்லாமலும் தேர்வு செய்யப்பட்டனர். பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 7,621 பதவிகளுக்கு 196 இடங்களுக்கு போட்டியின்றி கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், இன்று காலை 9.30 மணிக்கு பதவி ஏற்கவுள்ளனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்களுக்கு ஆணையர்களும், பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர்களும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளனர். இதைத்தொடர்ந்து மேயர், துணை மேயருக்கான மறைமுகத்தேர்தல் 4-ந்தேதி நடைபெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.