சேலம் அரசு அருங்காட்சியகத்தில் பாரம்பரிய அச்சுக்கலை வரலாற்று கண்காட்சி
நடைபெற்றது. அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் முல்லை, அரசு அச்சுக்கலை
வரலாற்றுக் கண்காட்சி இன்று நடைபெற்றது.
சேலம் அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் முல்லை அரசு அச்சுக்கலை
வரலாற்றுக் கண்காட்சியை தொடங்கி வைத்து கல்லூரி மாணவ மாணவியருக்கு
விளக்கினார்.சேலம் வரலாற்று சங்கம் மற்றும் சேலம் மாவட்ட ஆப்செட் பிரின்டர்
அசோசியேசன் சார்பில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் டென்மார்க் அரசரின் நூலகத்தில் இருந்து பெறப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள தரங்கம்பாடியில் முதல் அச்சு இயந்திரம் அமைத்து இந்தியாவில் முதல் தமிழ் அச்சு எழுத்துக்களை உருவாக்கிய சீகன்பால்க் அவர்களால் 1714 ஆம் ஆண்டில் அச்சடிக்கப்பட்ட பைபிள் புத்தகம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் உலகளாவிய அளவில் அச்சுக்கலை தோன்றிய வரலாறு தமிழகத்தில் அச்சுக்
கலையின் தொடக்கம் மற்றும் வளர்ச்சி ஆகியவை சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு
இருந்தன. வரலாற்று மாணவ மாணவியரை இந்த அச்சுக்கலை கண்காட்சி வெகுவாக கவர்ந்தது. இன்றைய இளைய தலைமுறையினர் நொடிப்பொழுதில் தங்களுக்கான அச்சடிப்பினை நிகழ்த்தி விடும் நிலையில் அதன் பாரம்பரியத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென சேலம் அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் முல்லை அரசு தெரிவித்துள்ளார்.







