முக்கியச் செய்திகள்

தென்மாவட்டங்களுக்கு 1,223 மெட்ரிக் டன் யூரியா – தமிழக அரசு நடவடிக்கை

தமிழ்நாட்டில் உரத் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், தென்மாவட்டங்களுக்கு 1,223 மெட்ரிக் டன் யூரியா வரப்பெற்றுள்ளது.

தமிழகத்தில் சமீபகாலமாக உரத் தட்டுப்பாடு என்பது நிலவி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில், உரத் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தென்மாவட்டங்களில் உள்ள அதிகப்படியான விவசாயம் செய்யும் மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக 1,223.1 மெட்ரிக் டன் யூரியா ரயில் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது –

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதாவது, 21 சரக்கு ரயில் பெட்டிகள் மூலம் கொண்டு வரப்பட்ட இந்த யூரியா உரங்கள் இன்று நெல்லை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து, அங்கிருந்து லாரிகள் மூலம் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணியில் வேளாண் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் விற்பனை மையங்களுக்கு 370.8 மெட்ரிக் டன் யூரியாவும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் விற்பனை மையங்களுக்கு 180 மெட்ரிக் டன் யூரியாவும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் அரசு உரக் கிடங்குகளுக்கு 45 மெட்ரிக் டன் யூரியாவும், தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் விற்பனை மையங்களுக்கு 252 மெட்ரிக் டன் யூரியா மூட்டைகளும், தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு விற்பனை மையங்களுக்கு 154.8 மெட்ரிக் டன் யூரியா மூட்டைகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் விற்பனை மையங்களுக்கு 220.5 மெட்ரிக் டன் யூரியாவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குரங்கம்மை நோய்; மக்கள் பீதியடைய தேவையில்லை- வி.கே.பால்

G SaravanaKumar

கலிலியோ நினைவாக சென்னையில் தொடங்கிய “நட்சத்திரத் திருவிழா”

Web Editor

மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி – தென்னாப்பிரிக்காவுக்கு 157 ரன்கள் இலக்கு

G SaravanaKumar