“குஷி மூலமா என்ன தூக்கி விட்டவர் S.j.சூர்யா” – விஜய்

“சினிமாவுல வெற்றி தோல்விகள் சகஜம்.. என்னோட திரை வாழ்க்கைலயும் do or die (செய் அல்லது செத்து மடி) என்பது போலான ஒரு சூழல் வந்துச்சி. இந்த படமும் ஓடலேன்னா அடுத்த என்ன? அப்படின்னு…

“சினிமாவுல வெற்றி தோல்விகள் சகஜம்.. என்னோட திரை வாழ்க்கைலயும் do or die (செய் அல்லது செத்து மடி) என்பது போலான ஒரு சூழல் வந்துச்சி. இந்த படமும் ஓடலேன்னா அடுத்த என்ன? அப்படின்னு ஒரு மிகப்பெரிய கேள்வி எனக்குள்ள இருந்துச்சி.. அந்த டைம்ல குஷி படத்த கொடுத்து என்னை தூக்கிவிட்டவரு s.j.சூர்யா. என்னோட life-ல அத மறக்க மாட்டேன். அதுக்கு மறுபடியும் உங்களுக்கு நான் நன்றிய தெரிவிச்சிக்குறேன்.” குஷி படம் குறித்தும் எஸ்.ஜே. சூர்யா குறித்தும் விழா மேடை ஒன்றில் விஜய் பேசிய வார்த்தைகள் இது.

கண்ணுக்குள் நிலவு, மின்சாரக்கண்ணா, நெஞ்சினிலே, என்றென்றும் காதல் என தொடர் சறுக்களில் சென்றுகொண்டிருந்த விஜய் கேரியரில் success கொடுத்து sixer அடித்த படம் குஷி! வெளியாகி 22 ஆண்டுகள் கடந்துவிட்டது.

“வடமேற்கு பகுதியில், கல்கத்தா சிட்டில பிறந்திருக்கக்கூடிய இந்த சிவாவுக்கும்.. தென்பகுதியில் குற்றாலத்துக்கு பக்கத்தில் பைம்பொழில் கிராமத்தில் பிறந்திருக்கக்கூடிய இந்த ஜெனிஃபருக்கும் தான் ஆண்டவன் நிச்சயிச்சி வச்சிருக்கான். இயற்கை இவர்களைத்தான் இணைக்கப்போகிறது. இவர்கள் மதத்தால், மொழியால், இனத்தால், வாழும் சூழ்நிலை ஆகியவற்றால் வேறுபட்டிருந்தபோதிலும் இவர்களுக்குள் பொதுவா ஒரு விஷயம் நிகழப்போது. அது என்னன்னா காதல். இவங்க ரெண்டு பேரும் எப்படி சேரப்போறாங்க? இதாங்க கதை!” என்று தன்னுடைய கட்டை குரலில் அன்பை குழைத்து வாய்ஸ் ஓவரிலேயே படத்தின் கதையை சொல்லிவிட்டுத்தான் திரைக்கதைக்குள் செல்வார் s.j. சூர்யா.

காதல் படங்களுக்கு ஹீரோ – ஹீரோயின் கதாப்பாத்திர வடிவமைப்பு மிகவும் முக்கியம். உடல் மற்றும் முக அமைப்புகளை தாண்டி இதை பொருத்து தான் இரண்டு கதாப்பாத்திரங்களுக்குள்ளும் கெமிஸ்ட்ரி வொர்க் அவட் ஆகும். குஷி படத்தின் 50வது நிமடத்தில் தான் சிவாவும்- ஜெனிஃபரும் முதன் முறையாக சந்தித்துக்கொள்வார்கள். ஆனால் ‘வாவ் செம்ம ஜோடில்ல.. எப்படியாச்சு இவங்க சேர்ந்துடனும்’ என்று அவர்கள் சந்தித்துக்கொள்ளும் முன்பே நாம் விரும்பும் அளவுக்கு ஆடியன்ஸின் மைண்டை டியூன் செய்துவிடுவார் இயக்குநர். ஹீரோயினை துள்ளலான பாடலுடன் intro செய்வது, அடுத்த 5 நிமிடங்களுக்குள் ‘மேக் மேக் மெக்கரீனா’ என்ற ரகளையான மற்றொரு பாடலுடன் ஹீரோவை intro செய்வது என நொடிக்கு நொடி frameக்கு frame இப்படத்தை செதுக்கியிருப்பார் எஸ்.ஜே!.மெலோடி, folk என இசையில் சரவெடி கொளுத்தியிருப்பார் தேவா. தசாப்தங்கள் கடந்து இப்படம் கொண்டாடப்படுவதில் அவரின் இசைக்கு முதன்மை பங்கிருக்கிறது.

கோயிலில் அணையப்போகும் விளக்கை காக்கும் முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் ஒரு ஈர்ப்பு அரும்பும். ‘அவ்ளோதான் முடிஞ்ச்சு.. இனிமே நட்புதான் காதல்தான்’ என்று ஆடியன்ஸ் ரெடியாவதற்குள் அடுத்த ஷாட்டிலேயே நம்முடைய மூலையில் ‘டிஷ்யூம்’என்று ஒரு பஞ்ச் வைப்பார் எஸ்.ஜே. சூர்யா. ‘உங்களை எங்கயோ பாத்த மாதிரி இருக்கே!’ என்று சிவா கேட்டதும் சட்டென ஒரு ஜெர்க் அடிப்பார் ஜெனிஃபர்! ‘ஐயய்யோ நான் எல்லா பசங்கமாதிரியும் சொல்லல.. நிஜமாவே உங்கள எங்கையோ பாத்த மாதிரி இருக்கே’ என்று நேசத்துடன் சிவா கூறுவார்.. ‘எனக்கும் கூட அப்படிதான் இருக்கு’ என்று கூறி சுவீட்டான புன்னகையோடு அதை ஆமோதிப்பார் ஜெனி. அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு இருவருக்குள்ளும் நிகழப்போகும் காதல் கண்ணாமூச்சி விளையாட்டிற்கான அடித்தளத்தை அந்த காட்சியிலேயே அழுத்தமாக பதிவு செய்துவிடுவார் எஸ்.ஜே.

அதன் பிறகு கார் ரிப்பேர் என்று சிவா பொய் சொல்ல இருவரும் ‘லாக் பண்னிட்டு வாக் பண்ணுவதாகட்டும்.. சிவாவின் அந்த திருட்டுத்தனமான குறும்புத்தனதை அரும்பிக்கொண்டிருக்கும் காதலோடு ஜெனி ரசித்து வெட்கபடுவதாகட்டும்.. சிவா தன்னுடைய அம்மாவிடம் போனில் பேசுவதை தவறதலாக புரிந்து ஜெனி possessive ஆகுவதாகட்டும்.. ஒவ்வொரு காட்சிகக்கும் அந்த சிவா-ஜெனி கதாப்பாத்திரங்களாகவே தங்களை உணர்ந்து ரசித்தார்கள் ஆடியன்ஸ்.

மொட்டை மாடியில் தென்றல் காற்று வீச கருப்பு நிற சேலையில் புத்தகம் படிக்கும் ஜோதிகாவின் இடுப்பை திருட்டுத்தனமாக பார்த்து ரசிப்பார் விஜய்( இதை எழுதும் போதே ஓவரா போயிடுமோன்னு கொஞ்சம் தயக்கம் இருக்கு. ஆனால் ஆடியன்ஸ் முகம் சுளிக்காத வகையில் அழகாக காட்சிப்படுத்தியிருப்பார் எஸ்.ஜே. சூர்யா. படத்தில் மற்ற சில காட்சிகளில் கிளாமர் டோஸ் அதிகமாக இருக்கும் என்பது தனி சேப்டர்). இதைப்பார்க்கும் ஜெனி புடவையால் இழுத்து மறைப்பார். அசைந்தாடும் காற்றுடன் சிவாவின் மனதும் சபலமாடும்.

அந்த காட்சியை உற்றிநோக்கினால் தெரியும்.. முதலில் பயப்படும் விஜய் மூன்றாவது முறையாக தான் இடுப்பை பார்ப்பதை ஜெனி கவனிக்கிறார் என்று தெரிந்துமே பார்த்துக்கொண்டே இருக்கும் விஜய் மெதுவாகவே தன் பார்வையை விலக்குவார். காதலை கூட சொல்லாமலேயே அடுத்த கட்டத்திற்கு செல்ல ஆசைப்படும் இடத்தில் சிவாவின் ஈகோ வெளிப்படும். அதன்பிறகு ஜெனியின் ஈகோவையும் அவர் தான் trigger செய்துவிடுவார்.(ஈகோவால் ஜெனியிடம் தான் toxic-ஆக நடந்துகொண்டதற்கு கிளைமேக்ஸில் கடிதத்தில் மன்னிப்பு கேட்பார் சிவா.)

ஈர்ப்பு , அன்பு, காமம் என காதலுக்கு மூன்று முக்கிய பாகங்கள் உண்டு. முதல் இரண்டு பாகங்களில் சிவா செய்யும் குறும்புத்தனத்தையும், திருட்டுத்தனத்தையும் ரசிக்கும் ஜெனி முன்றாவது பாகத்தின் போது மட்டும் கோபம் கொள்வாள். ஜெனி பிறந்து வளர்ந்த சூழலைக்கொண்டு அவரின் கதாப்பாத்திரத்தை அப்படி கட்டமைத்திருப்பார் இயக்குநர். ஜெனி கிராமத்தில் பிறந்த கொஞ்சம் வெகுளியான short tempered பெண். சிவா நகரத்தில் பிறந்த practical-ஆன smart boy. அதுவே திரைக்கதைக்கான சுவாரஸியத்தையும் கூட்டியிருக்கும்.

‘நீ என் இடுப்பை பாத்தியா இல்லையா’ என ஜெனிஃபர் கேட்கும்போது, ‘நீ என்ன லவ் பண்ணியா இல்லையா’ என சிவா கேட்க இருவருக்குள்ளான ஈகோ வெடித்து வாணவேடிக்கை நடத்தும். ஆனால் ஆடியன்ஸை கட்டிப்போட அதைத்தாண்டிய ஒரு லேயரை சேர்க்க விரும்பினார் எஸ்.ஜே. ஜெனியின் கடந்தகாலத்தை பற்றிய புரிதல் இல்லாமல் ‘உன்ன கல்யாணம் பன்ற மாதிரி வந்தா லெட்டர் எழுதிவச்சிட்டு ஓடிப்போயிடுவேன்’ எனக்கூறி எமோஷ்னலாக அவரை காயப்படுத்திவிடுவார். அதன்பிறகு possessiveness, ஈகோ, மோதல், காதல், முத்தம் என rest is history

இப்படத்துடைய இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் விஜய் – ஜோதிகா, இருவரின் மேனரிஸமும் ஒரேமாதிரிதான் இருக்கும். பின்னாட்களில் s.j. சூர்யாவின் நடிப்பை பார்த்தபிற்குதான் நாமே இதை உணந்துகொண்டோம். ஜெனியின் அப்பாகூட சில இடங்களில் எஸ்.ஜே.சூர்யா போலவே நடித்திருப்பார். சிவா அவருக்கு லிஃப்ட் கொடுக்கும்போது, ‘ஒரு பொண்ணு அவளுக்கே அவ்ளோ இருந்தா..எனக்கு எவ்ளோ இருக்கும்’ என்று கேட்டவுடன் இருவரும தவணை முறையில் நொடி இடைவேளையில் இரண்டு முறை தலையாட்டுவதெல்லாம் அக்மார்க் எஸ்.ஜே. ஸ்டைல்.

அதுமட்டுமா!, படத்தின் இறுதியில் இருவருமே காதலை வெளிப்படுத்த ஒருவரை தேடி மற்றோரு ரயில்வே ஸ்டேஷனுக்கு தேடி அலைந்து தோய்ந்து சோகத்தில் திரும்பிக்கொண்டிருப்பார்கள். ஜெனி ஆட்டோவில் இருக்க, சிவா காரில் அமர்ந்திருக்க இருவருமே ஒருவரை ஒருவர் காணல் போல் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் recognize செய்யமாட்டார்கள். பிரிவின் பெரும் துயர் மனதை ஆட்கொண்டு அவர்களின் கண்களை மறைத்திருக்கும் ( சின்ன வயசுல இந்த படம் பாக்குறப்போவே இதை உணர முடிந்தது. அதுதான் எஸ்.ஜே.வின் கைவித்தை).

‘இந்த இரண்டு இதயங்களும் எப்போது இடம் மாறிக்கொள்ளப் போகின்றன. இந்த இரண்டு இதழ்களும் எப்போது முத்தமிட்டுக்கொள்கின்றன!’ என்று தொடங்கி, அந்த முத்தக்காட்சியோடு படத்திற்கு end card போட்டிருப்பார் திரைக்கதை இளவரசன் எஸ்.ஜே.சூர்யா. ‘இந்த படம் பாத்துட்டு இயக்குநர் விக்ரமன் எங்கிட்டா கேட்டாரு.. அதுல கதைன்னு என்ன இருக்கு எப்படி அதை செலக்ட் பன்னீங்கன்னு.. கரெக்ட் தான் சார், எஸ்.ஜே.சூர்யான்னு ஒருத்தர் இருக்கார், அவரு கதை சொல்லி நீங்க கேக்கனும் அதுல கிங் அவரு.. நம்மல அப்படியே கட்டி போட்டுடுவாரு’ என்று குறிப்பிட்டிருப்பார் தளபதி விஜய். அவரை மட்டுமல்ல திரைக்கு வந்த அத்தனை பேரையுமே கட்டிப்போட்டது அவரின் குஷி! THE END.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.