டான் திரைப்படம்: கண்கலங்கிய நடிகர் ரஜினிகாந்த்

டான் திரைப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனை போனில் தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார். இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து கடந்த 13ஆம் தேதி வெளியானது ‘டான்’ திரைப்படம். சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடெக்ஷன்ஸ் மற்றும்…

டான் திரைப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனை போனில் தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார்.

இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து கடந்த 13ஆம் தேதி வெளியானது ‘டான்’ திரைப்படம். சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடெக்ஷன்ஸ் மற்றும் லைக்கா இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி, பாலசரவணன், முனீஸ்காந்த், ஆர்.ஜே.விஜய் ஆகியோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திர்ந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை, தமிழகத்தில் ரூ. 65 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சிவகார்த்திகேயன் அளித்த பேட்டியில், “டான்” பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சார் போனில் அழைத்தார். சிறப்பாக நடித்திருந்தீர்கள். கடைசி 30 நிமிடங்கள் என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று பாராட்டினார். சூப்பர் ஸ்டாரின் இந்த பாராட்டு எங்களுக்கு ஊக்கமாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.