தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் தேதியை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு முழுவதும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்று வந்தனர். தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் சில கட்டுப்பாடுகளுடன் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, மே 3ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.
மே 3ம் தேதி மொழிப்பாடமும், மே 5ம் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெறும். மே 7ம் தேதி கணினி அறிவியல், உயிரி வேதியியல், மனையியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட தேர்வுகளும், மே 11ம் தேதி இயற்பியல், பொருளியல் பாடங்களுக்கு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மே 17ம் தேதி கணிதம், வணிகவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களுக்கும், மே 19ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கும் தேர்வு நடைபெறும். இறுதித்தேர்வு மே 21 அன்று வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் தேர்வுக்கு நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
