புதுச்சேரி துணைநிலை ஆளுநராக, கிரண்பேடி கடந்த 2016 மே மாதம் 29-ம் தேதி பதவியேற்றார்.
முதன்முதலாக இலவச அரிசி விவகாரத்தில் புதுச்சேரி அமைச்சரவைக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2017-ல் நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்ததில் இந்த மோதல் முற்றியது.
தொடர்ந்து, அதிகாரிகளை அழைத்து பேசுவது, ஆணையிடுவது போன்ற விவகாரத்தில், ஆளும் அரசுக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே நீரு பூத்த நெருப்புபோல் மோதல் நீடித்து வந்தது.
2019 பிப்ரவரி மாதம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் ஆளுநர் மாளிகை வாயிலில் அமர்ந்து கிரண்பேடிக்கு எதிராக 6 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
அதிகாரிகளிடம் நேரடியாக கோப்புகளை பெற்று அரசுக்கு எதிராக செயல்பாடுவதாகவும், காவல்துறை அதிகாரிகளை மிரட்டுவதாகவும் ஆளுநர் கிரண்பேடி மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
2021 ஜனவரியில் ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி மீண்டும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மீண்டும் 3 நாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் முறையை அமல்படுத்தியதில் மீண்டும் அரசுடன் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து பிப்ரவரி 10ஆம் தேதி முதலமைச்சர் நாராயணசாமி, டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்து ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடு தொடர்பான புகார்கள் அடங்கிய மனுவை அளித்தார்.
இந்த சூழலில், பிப்ரவரி 17ஆம் தேதி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை நீக்கம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் உத்தரவிட்டுள்ளார்.