முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முதல்வர் அலுவலகத்தில் பேரறிவாளன் மனு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முதலமைச்சர் அலுவலக பொது தகவல் அதிகாரியிடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், கடந்த மாதம் 29ஆம் தேதி தமிழக ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் வழங்கிய கடிதத்தின் நகல் வேண்டும் எனக் கோரியுள்ளார். மேலும், தனது கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுத்து, உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய கடித நகல் மற்றும் தன்னை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையின் பரிந்துரை தொடர்பாக ஆளுநர் எடுத்த முடிவின் நகலையும் பேரறிவாளன் கேட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, கருணை மனுவுடன் சேர்த்து தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்ப முடிவெடுத்தது தொடர்பாக சட்ட நிபுணர்களிடம் ஆளுநர் கருத்து கேட்டிருந்தால் அதுதொடர்பான நகலையும் வழங்குமாறு கோரியுள்ளார்.

தனது கருணை மனு தொடர்பாக தமிழக முதல்வர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பேரறிவாளன் அளித்த மனுவில், கடந்த 29-01-2021 தமிழக ஆளுநரை சந்தித்து முதல்வர் வழங்கிய கடிதத்தின் நகல்.

கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுத்த, உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய கடித நகலின் விவரம். தன்னை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையின் பரிந்துரை தொடர்பாக தமிழக ஆளுநர் எடுத்த முடிவின் நகல்.

தனது கருணை மனுவுடன் சேர்த்து தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்ப முடிவெடுத்தது தொடர்பாக சட்ட நிபுணர்களிடம் தமிழக ஆளுநர் கருத்து கேட்டிருந்தால் அது தொடர்பான நகல். உள்ளிட்ட விவரங்களை கேட்டு தமிழக முதல்வர் அலுவலக பொது தகவல் அதிகாரியிடம் பேரறிவாளன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளித்துள்ளார்.

Advertisement:

Related posts

IPL 2021 – தொடர் வெற்றியை தக்க வைக்குமா RCB!

Saravana Kumar

கோயில்களில் தமிழில் அர்ச்சனை: ஆலோசனை நடத்தும் அமைச்சர்!

Ezhilarasan

சமூக வலைதள பதிவுகள் அனைத்தையும் டெலிட் செய்த தீபிகா படுகோன்!

Jayapriya

Leave a Reply