11 மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையெடுத்து 11 மாநில சுகாதார அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா,…

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையெடுத்து 11 மாநில சுகாதார அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்தினார்.

மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, உள்ளிட்ட 11 மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களுடன் காணொலி காட்சி வழியாக டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.. மேலும் இக்கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் 92.38 சதவீதமாகவும், கொரோனாவால் உயிரிழந்தோர் விகிதம் 1.30 சதவீதமாக இருப்பதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.