பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 10ஆம் வகுப்புத் தேர்வில் கன்னியாகுமரி மாவட்டமும், பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டமும் முதலிடம் பிடித்துள்ளன.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 8,21,994 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 90.07% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 42,519 பேர் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதவில்லை. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 7,55,998 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 93.76% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 31,034 பேர் தேர்வை எழுதவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 97.22 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று கன்னியாகுமாரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் 97.95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றதையடுத்து, பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 86.96 சதவீதம் குறைந்த தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள், தோல்வியடைந்தவர்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. தோல்வி அடைந்தவர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
12-ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை 27இல் தொடங்கவுள்ளது. 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஆகஸ்ட் 2இல் தொடங்கும். ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. மாணவர்களுக்கு SMS வாயிலாக +2 முடிவுகள் அனுப்பப்பட்டன.
தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து: புதுச்சேரி,தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுககளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் மனம் தளராமல் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தோல்விகள் வாழ்க்கையில் இயல்புதான் ஆகையால் எந்தவிதத்திலும் முயற்சிகளைக் கைவிடாமல் கடின முயற்சி செய்து படித்து மறுதேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா