ஐந்து தலைமுறை கண்ட 103 வயது மூதாட்டி – சங்கமித்து கொண்டாடிய குடும்பத்தினர்!!

பல்லடத்தில் ஐந்து தலைமுறை கண்ட 103 வயது மூதாட்டியை போற்றும் வகையில் அவரது உறவுகள் ஒன்றிணைந்த தலைமுறை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது திருப்பூர் மாவட்டம், வேலப்பகவுண்டன்பாளையம் கிராமத்தை சேர்ந்த குமாரசாமி – வேலாத்தாள் தம்பதியினரின்…

பல்லடத்தில் ஐந்து தலைமுறை கண்ட 103 வயது மூதாட்டியை போற்றும் வகையில் அவரது உறவுகள் ஒன்றிணைந்த தலைமுறை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம், வேலப்பகவுண்டன்பாளையம் கிராமத்தை சேர்ந்த குமாரசாமி – வேலாத்தாள் தம்பதியினரின் குடும்ப உறவுகள், பல்லடத்தில் நடைபெற்ற தலைமுறை சங்கமம் நிகழ்ச்சியின் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்டனர்.

அக்குடும்பத்தைச் சேர்ந்த 103 வயதான மூதாட்டி தெய்வாத்தாள் ஐந்து தலைமுறைகளைக் கண்டு நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து வருகிறார். அவரைப் போற்றிக் கொண்டாடும் வகையில் ஒன்றுகூடிய குடும்ப உறவுகள் மறைந்த பெரியோர்களின் புகைப்படத்தை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் தங்களது தாத்தா, பாட்டி என அனைவரையும் அமர வைத்து அவர்களிடம் ஆசி பெற்றும், குடும்பத்தோடு செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.

இதையும் படியுங்கள் : 2020 வீழ்ச்சி, 2021 கோப்பை, 2022 வீழ்ச்சி, 2023…?? – கம்பேக் கொடுக்குமா தோனி & கோ??

ஐந்து தலைமுறைகளை கண்ட 103 வயதுடைய தெய்வாத்தாளுக்கு மூன்று மகன்கள் மற்றும் நான்கு மகள்கள், 17 பேரன் பேத்திகள், 35 கொள்ளு பேரன் பேத்திகள் உள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சிங்கப்பூர் அமெரிக்காவில் இருந்தும் பல்லடத்தில் சங்கமித்த அவர்கள், இந்த ஒன்றுகூடல் மூலம் குடும்ப உறவுகளை புதுப்பித்துக் கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.