வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 1000 ஆண்டுகள் பழமையான சிலைகள் பறிமுதல்

வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 1000 ஆண்டு பழமையான 8 உலோக சிலைகளை,சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டு ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடம்பாக்கத்தில் மாசிலாமணி என்பவருக்கு சொந்தமான இடத்தில் தொன்மையான…

வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 1000 ஆண்டு பழமையான 8 உலோக சிலைகளை,சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டு ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோடம்பாக்கத்தில் மாசிலாமணி என்பவருக்கு சொந்தமான இடத்தில் தொன்மையான சிலைகள் இருப்பதாக சிலைகள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டு போது சிலைகள் இல்லை.

தொடர்ந்து விசாரணை செய்த போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சுவாமிமலை சர்வமானய மாசிலா மணிக்கு சொந்தமான இடத்தில் இரண்டு புத்தர் சிலைகள், விஷ்ணு, ரமண மகரிஷி,  ஆண்டாள், நடராஜர், போக சக்தி அம்மன், சிவகாமி அம்மன் உள்ளிட்ட எட்டு உலோக சிலைகள் இருந்தது தெரியவந்தது. பெருமை மதிப்புடைய சிலைகள் மற்றும் தொல்லியல் துறை சான்றிதழ்களையும் கைப்பற்றினர்.

மாசிலாமணியிடம் விசாரணை நடத்திய போது சிலைக்கான உரிமம் மற்றும் அதை எங்கு யாரிடம் இருந்து பெற்றதற்கான தகவல்களை அவரால் கூற முடியவில்லை.தேடுதலின் போது போக சக்தி தேவி மற்றும் விஷ்ணு புத்தர் சிலைகளுக்கு தொல்லியல் துறை வெளியிட்ட தொல்பொருள் சான்றுகள் ரகசிய இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது இன் சிலைகள் எந்த கோயில்களில் இருந்து திருடப்பட்டது மற்றும் அதன் தொன்மை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிலைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது என்பது முதற்கட்ட விசாரணை தெரிய வந்துள்ளது. ‌

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.