இரட்டை இலை சின்னத்தை மீட்பேன்-வி.கே.சசிகலா

அதிமுகவை கைப்பற்றுவதுடன் இரட்டை இலை சின்னத்தையும் மீட்பேன் என்று வி.கே.சசிகலா தெரிவித்தார். அதிமுகவின் முதல் எம்.பி.யான மாய தேவர் காலமானார். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். வி.கே.சசிகலாவும் அஞ்சலி செலுத்தினார். பின்னர்…

அதிமுகவை கைப்பற்றுவதுடன் இரட்டை இலை சின்னத்தையும் மீட்பேன் என்று வி.கே.சசிகலா தெரிவித்தார்.

அதிமுகவின் முதல் எம்.பி.யான மாய தேவர் காலமானார். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். வி.கே.சசிகலாவும் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுகவை கைப்பற்றுவதுடன் இரட்டை இலை சின்னத்தையும் மீட்பேன் என்று சசிகலா சூளுரைத்தார்.

அவர் மேலும் கூறுகையில், “அதிமுக தனிப்பட்ட நபருக்கான கட்சி அல்ல. பொறுத்திருந்து பாருங்கள். அனைவரையும் ஒன்றிணைப்பேன்” என்றார்.

மாயத் தேவர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தந்தவர். முதல் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் சார்பில் வெற்றி பெற்ற மாயத்தேவரின் நினைவு என்றைக்கும் எங்கள் நினைவில் இருக்கும். ஆழ்ந்த இரங்கலை அவரின் குடும்பதாருக்கு தெரிவிக்கிறேன் என்றார் ஓபிஎஸ்.

மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகிய ஓபிஎஸ் ஆதரவளார்களும் மாயத்தேவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

வெல்லமண்டி நடராஜனும் அஞ்சலி செலுத்தினார். திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் காலமான  அதிமுகவின் முதல் பாராளுமன்ற உறுப்பினர் மாயத்தேவர் உடலுக்கு ஓ.பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்திய பிறகு அவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.