தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் கும்பாரஹள்ளி தேசிய நெடுஞ்சாலை சோதனை சாவடியில் காவல்துறையினர் இன்று மாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக சொகுசு கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்ததை கண்ட காவல்துறையினர் அதனை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து இருவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் சேலம்
மாவட்டத்தைச் சேர்ந்த வசந்த் மகோக்கர் சிங்க்(48), மற்றும் முரளி(38) ஆகியோர்
என தெரியவந்தது.
இதனை அடுத்து அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 33 ஆயிரம் மதிப்புள்ள 100 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 4 இலட்சம் மதிப்பிலான சொகுசு காரை பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.







