பாஜகவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் கேரள கலாச்சாரத்தை அழிக்கும் – பினராயி விஜயன்!

பாஜகவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் கேரள கலாச்சாரத்தை அழிக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியுள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இன்று மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சியின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்று பேசினார்.

அவர் பேசியது,  சமீபத்தில் கேரள வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ​​வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 25 சதவீத வாக்குகளைப் பெறுவதையும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை அடைவதையும் பாஜக நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஷா அறிவித்தார். கேரளா பாஜகவின் முக்கிய இலக்காக உள்ளது என்பதை இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

அவர்கள் ஒரு அரசியல் கட்சி, ஆகவே அவர்கள் முயற்சிப்பது இயல்பு. ஆனால் கவனத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால், பாஜகவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் கேரள கலாச்சாரத்தை அழித்துவிடும். இந்த  உணவு நமது சமூகத்தில் இருக்க வேண்டும்,” என்று  கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ”மகாபலி நம்மைப் பார்க்க வருவதாக  நம்பப்படும்  பண்டிகையான ஓணத்தையே அவர்கள் மாற்ற விரும்புகிறார்கள். இன்று நாம் அனுபவிக்கும் அனைத்தையும் பழைய காலத்திற்கு மாற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள். பாஜகவை ஆதரிப்பதன் தாக்கங்களை மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.