தமிழகம் செய்திகள்

சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை- நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பயிர்கள் சேதம்

ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் அத்திக்கட்டி, ஆலங்கட்டி மழை பெய்தது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான ஏக்கர்களில் நெல், மக்காசோளம், மரவள்ளி கிழங்கு, பருத்தி, வாழை உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில்  நேற்று மாலை கெங்கவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் அத்திக்கட்டி, ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த கனமழைக்கு பள்ளக்காடு, நடுவலூர், வீரகனூர், புனல்வாசல், லத்துவாடி, கெங்கவல்லி, தெடாவூர், மணக்காடு, கிழக்கு ராஜாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில்  நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளப் பயிர்கள் வேறோடு சாய்ந்து சேதமாகியுள்ளன.
ஏக்கர் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, 70 நாட்களாக பராமரித்து வந்த மக்காச்சோளப் பயிர்கள், இன்னும் 50 நாட்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், மழையால் ஏற்பட்டுள்ள இந்த சேதம், விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் தங்களுக்குப் பல இலட்ச ரூபாய் ஈழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு பாதிக்கப்பட்ட பயிர்களை
ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

50-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை..! காவல்துறை தீவிர விசாரணை!

Web Editor

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும்; தேர்தல் ஆணையம்

G SaravanaKumar

கேரளா : இருசக்கர வாகனத்தில் வந்த பள்ளி மாணவர் பேருந்திற்கு அடியில் சிக்கி உயிரிழப்பு

Web Editor