முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

கோப்பையை வெல்லப்போவது யார்? மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் மும்பை-டெல்லி அணிகள் இன்று மோதல்

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தாண்டு முதல் முறையான பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியை அறிமுகம் செய்தது. இந்த போட்டிகள் கடந்த 4ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோதின. லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி தலா 12 புள்ளிகள் பெற்றாலும் ரன்-ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மும்பை அணி 2-வது இடத்தையும், உ.பி.வாரியர்ஸ் 3-வது இடத்தையும் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தன. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் முறையே 4-வது, 5-வது இடங்களை பிடித்து வெளியேறின.நேற்று முன்தினம் இரவு நடந்த எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் உ.பி.வாரியர்சை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மகளிர் பிரிமீயர் லீக் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது. இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டியில் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாளை மறுநாள் முதல் PK ரோசி திரைப்பட விழா – இயக்குநர் பா.ரஞ்சித் அறிவிப்பு!

Web Editor

எரிமலையின் உச்சியில் வாழ்ந்து உலக சாதனை படைத்த பெண்!

Jayasheeba

2வது டெஸ்ட்: 5 விக்கெட் அள்ளினார் ஆண்டர்சன், பதிலடி கொடுத்தார் சிராஜ்

Gayathri Venkatesan