அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறார்கள் தப்ப முயற்சி – சென்னையில் பரபரப்பு

சென்னையில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறார்கள் தப்ப முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை புரசைவாக்கம் கெல்லீஸ் பகுதியில் செயல்படும் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில், குற்றச் செயல்களில் ஈடுபட்ட, பதினெட்டு வயதுக்குட்பட்ட…

சென்னையில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறார்கள் தப்ப முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை புரசைவாக்கம் கெல்லீஸ் பகுதியில் செயல்படும் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில், குற்றச் செயல்களில் ஈடுபட்ட, பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறார்கள் 75-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த இல்லம் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்றிரவு இந்த கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருந்த சிறார்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை, விடுதி காப்பாளர் கண்டித்ததால் மின்விசிறி, மேசைகள் போன்ற பொருட்களை சிறார்கள் உடைத்ததாகத் தெரிகிறது. பின்னர், அங்கிருந்து 6 சிறார்கள் தப்ப முயற்சி செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : பஞ்சாப் துப்பாக்கிச் சூடு சம்பவம் – தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு!

ஆனால் அவர்களால் தப்பிக்க முடியாததால், கூர்நோக்கு இல்லத்தின் வளாகத்திலேயே 6 சிறார்களும் பதுங்கியுள்ளனர். தகவலறிந்த அதிகாரிகளும், காவல்துறையினரும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து எஸ்.பி கோபி, சிறார்கள் தப்பிக்க முயற்சித்த இடத்தை ஆய்வு செய்தார். அப்போது சிறையின் பூட்டை கூர்மையான பொருட்களால் சிறார்கள் உடைத்தது தெரியவந்தது. கடந்த 2016ம் ஆண்டு கெல்லீஸ் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 33 சிறார்கள் தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.