சிஎஸ்கே தோல்விக்கு ருதுராஜ் தான் காரணம்! – ரசிகர்கள் கருத்து

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்ததற்கு ருத்ராஜ் பேட்டிங் சரியாக இல்லாததே காரணம் என்று சென்னை அணி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று…

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்ததற்கு ருத்ராஜ் பேட்டிங் சரியாக இல்லாததே காரணம் என்று சென்னை அணி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த
போட்டியில் முதலில் பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 175 ரன்களை
குவித்தது. பின்னர் 176 ரன்கள் வெற்றி இலக்கை கொண்டு களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 172 ரன்கள் எடுத்து, 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


இதுகுறித்து கருத்து தெரிவித்த சிஎஸ்கே ரசிகர்கள், “இந்த போட்டியில் தோனி அடித்த இரண்டு சிக்சர் சிறப்பாக இருந்தது. ருத்ராஜ் பேட்டிங் சரியாக இருந்திருந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றிருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்விக்கு காரணம் ருத்ராஜ் தான்.

இதையும் படியுங்கள் : CSK vs RR: ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

176 ரன்கள் என்பது ஒரு சாதாரண இலக்கு தான். பேட்டிங் முறையாக இருந்திருந்தால்
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றிருக்கும். முதல் ஆறு ஒவர்களில், போட்டி சரியாக நடைபெற்றது. பிறகு தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் சென்னை அணி தோல்வி பக்கம் சாய்ந்தது. ஒவ்வொரு பந்திற்கும் சென்னை அணி தோற்குமா, வெற்றி பெறுமா என்று பதற்றத்தில் தான் இருந்தோம்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே விளையாடுவது ஒரு நல்ல நினைவு. அடுத்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெறும் என்று நம்புகிறோம். இந்த போட்டியில் தோனி 38 ரன்கள் எடுத்தும், தோல்வி அடைந்தது மிகவும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இறுதி கட்டத்தில் தோனி – ஜடேஜா பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருந்தது.

தோனியை பார்த்ததும், தோனியின் சிக்சரை பார்த்ததும் எங்களுக்கு மனநிறைவாக
உள்ளது. சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை இன்னும் மேம்படுத்த வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த போட்டியில் இன்னும் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது” என்று கூறினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.