மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியின் 10 முக்கிய பிரச்னைகளை இந்தச் செய்தியில் பார்ப்போம்.
தொகுதியின் பெயர் : மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் : கோ.தளபதி (திமுக)
தொகுதியின் பிரதான 10 பிரச்னைகளின் பட்டியல்…
1) செல்லூர் கண்மாய், வண்டியூர் கண்மாய் போன்ற நிலத்தடி நீர் ஆதாரங்கள் உள்ள
கண்மாய்களை தூர் வாரி நிலத்தடி நீர் மட்டத்தை செறிவூட்ட கோரிக்கை.
2) கண்மாய்களில் இருந்து வைகையாற்றுக்கு செல்லக் கூடிய பாசன நீர் வரத்து
வாய்க்கால்கள் தற்போது கழிவு நீர் ஒடையாக மாற்றப்பட்டுள்ளது. பாசன நீர் வரத்து
வாய்க்கால்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர கோரிக்கை.
3) செல்லூர் பகுதியின் அடையாளமாக இருந்த நெசவுத் தொழில் வெள்ளத்தால் அழிந்தது,
நெசவுத்தொழிலை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர கோரிக்கை.
4) தொகுதிக்குள் உள்ள பல்வேறு இடங்களை இணைக்கும் விதமாக நகரப் பேருந்து வசதி
செய்து தர கோரிக்கை.
5) விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் பள்ளி, நூலகம் கட்டவும், விளையாட்டு
மைதானம், பூங்கா அமைக்க கோரிக்கை.
6) போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கோரிப்பாளையம் சந்திப்பு மற்றும்
அப்போலோ மருத்துவமனை சந்திப்பில் மேம்பாலங்கள் கட்ட கோரிக்கை.

7) தென் மாவட்ட மக்களை இணைக்கும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில்
குடிநீர், கழிவறை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை.
8) தொகுதியில் உள்ள தெருக்கள் மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில்
சாலை வசதிகளை செய்து தர கோரிக்கை.
9) தொகுதி முழுதும் 2 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம்
செய்யப்படுகிறது, குடிநீர் சீராக வினியோகம் செய்ய கோரிக்கை.
10) பாதாள சாக்கடைப் பணிகள் நிறைவு பெறாத காரணத்தால் பெரும்பான்மையான
இடங்களில் கழிவு நீர் வெளியேறி வருகிறது. பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக
நிறைவேற்ற கோரிக்கை.







