தி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள், நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாத பத்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
தி.நகரில் உள்ள பஸ் டிப்போ மழை வந்தால் தண்ணீர் தேங்கி விடுகிறது அதை சரி செய்ய வேண்டும். மேலும் அதனை சுற்றி உள்ள சாலைகளை சரி செய்ய வேண்டும் என்றும் பஸ் டிப்போவை சுற்றி கழிப்பறை கட்டிதருமாறும், அங்குள்ள சுற்றியுள்ள கடைகளை அகற்றி புது கடைகள் கட்டித் தருமாறும் பொதுமக்களும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், மழை பெய்தால் தண்ணீர் தேங்கத்தான் செய்கிறது மழை நீர் வடிகால் பணியை தீவிர படுத்தி விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது காவல்துறையினர் இருப்பதில்லை இதை கருத்தில் கொண்டு காவல் துறை அதிகப்படுத்தி நெரிசல்களை குறையபடுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
தி.நகரை சுற்றியுள்ள சாலைகளை விரிவுப்படுத்தி போக்குவரத்து நெரிசல்கள் இல்லாமல் தூய்மை இந்தியா, தூய்மை நகரம் என்று நாட்டையே சொர்க்க பூமியாக மாற்றி வரும் அரசு இவ்வாறு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மேம்படுத்த வேண்டும். போக்குவரத்து சிக்கல்கள் நிறைய ஏற்படுவதனால், தேனாம்பேட்டை சிக்னல், பனகல்பார்க் சிக்னல், நந்தனம் சிக்னல் இவ்வாறு அதிகமான மக்கள் தொகை இருக்கும் சாலை பகுதிகளில் ஒரு வழி பாதையாக மாற்றி சரி செய்து கொடுத்து தரவேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு சிக்னல்களிலும் 10 அல்லது 15 நிமிடங்கள் நிற்க வேண்டியதாக இருக்கிறது. அதனால் தமிழக அரசு இதற்கு தீர்வு தேடித் தர வேண்டும் என்றும், வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் இல்லை. ஆதலால், பெரிய பொருட்செலவில் செய்து முடித்திருக்கின்ற கார் பார்க்கிங் ஏரியாவை திறந்து வைக்க வேண்டும் எனவும் குழந்தைகள் விளையாடும் மைதானத்தை குப்பை கிடங்காக மாற்றி அமைத்துள்ளனர். அதனால், கொசு தொல்லைகள் ஏற்படுகின்றது அதனையும் சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.







