புதுச்சேரியிலும் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பரிந்துரைத்துள்ளார்.
புதுச்சேரியில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு பரிந்துரை செய்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், புதுச்சேரியில் 10% வழங்க துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.
புதுச்சேரி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தொடர் வலியுறுத்தலை தொடர்ந்து கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் இருந்தே இந்த இடஒதுக்கீட்டை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா