உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணிக்கு நடிகர் தனுஷ் ரூ.1 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி, சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரின் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதால் அவருக்கு உதவித் தேவைப்படுவதாக நடிகரும் போண்டா மணியின் நண்பருமான பெஞ்சமின், கண்ணீர் மல்க அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கோரிக்கை வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் தொலைக்காட்சியிலும் செய்திகள் வெளியிடப்பட்டன. அதன் எதிரொலியாக நடிகர் விஜய் சேதுபதி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், உள்ளிட்ட பலரும் அவரை சந்தித்து, அவருக்கான மருத்துவம் மற்றும் பொருளாதார உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் போண்டா மணிக்கு நடிகர் தனுஷ் ரூ.1 லட்சம் கொடுத்து அவருக்கு உதவி செய்துள்ளார். நடிகர் தனுஷ் செய்த இந்த உதவிக்கு நன்றி கூறி போண்டா மணி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.