முக்கியச் செய்திகள் கட்டுரைகள் விளையாட்டு

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் இரும்பு பெண்மணி ஜூலன் கோஸ்வாமி


நாகராஜன்

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் கதாநாயகியாக விளங்கும் ஜூலன் கோஸ்வாமி தனது 20 வருட கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்துள்ளார். அவரைப் பற்றி விவரிக்கிறது இந்த கட்டுரை…

90 மற்றும் 2000ங்களில் பிறந்தவர்களுக்கு, குறிப்பாக விளையாட்டு மீதான ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்த வருடம் ஒரு கடினமான வருடமாகத் தான் அமைந்திருக்கிறது.
நாம் அன்று ரசிக்கத் தொடங்கி, ஒவ்வொரு விளையாட்டின் மீதான புரிதல்கள் அனைத்தும் காதலாக மாறக் காரணமாக இருந்த ஒவ்வொரு வீரர் வீராங்கனைகளும் தொடர் ஓய்வு அறிவித்து வருவது, அனைவரையும் ஓய்வின்றி வருந்த செய்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

டென்னிஸ் நட்சத்திரங்கள் செரீனா வில்லியம்ஸ், ரோஜர் பெடரர், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் உட்பட பலர், அவரவர் விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவது ஒருபக்கம் இந்த தலைமுறையின் பார்வைக்கு
வெளிச்சமாகிறது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜூலன் கோஸ்வாமி தனது
20 வருட கிரிக்கெட் வாழ்கையை இங்கிலாந்து மண்ணில், கிரிக்கெட்டின் கோவிலாக
கருதப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நிறைவு செய்து கொண்டார்.

இந்திய மகளிர் அணி, ஜூலன் கோஸ்வாமிக்கு கொடுத்த மறக்க முடியாத பரிசு என்னவென்றால், இங்கிலாந்து மண்ணில், இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்றிலேயே முதல் முறையாக, இந்திய மகளிர் அணி தொடரைக் கைப்பற்றியதாகத் தான் இருக்கும்.

தனது 20 வருட கிரிக்கெட் பயணத்தில் 10,000 பந்துகளை வீசியுள்ள கோஸ்வாமி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் பெண் என்ற சாதனையை தன்வசப்படுதியவர் என்பதை ஒருபோதும் மறக்க முடியாது. டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அதிக வருடங்கள் ஒரு அணிக்காக பயணித்த இரண்டாவது
பெண்மணி என்ற பெருமை 19 வருடங்கள், 262 நாட்கள் என்ற கணக்குடன் கோஸ்வாமியையே சேரும். இதே கணக்குடன் இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு குடும்பத்தில் பெண்களின் சுதந்திரத்தை உடைத்து, சங்கிலி போட்டு கட்டி வைத்திருப்பது போன்ற சூழல் நிலவிய காலத்திலே, நாட்டுக்காக தன்னை அர்ப்பணம் செய்து, உலகிற்கு தன்மீதான பார்வையை வெளிச்சமிட்டு காட்ட செய்தவர் ஜூலன் கோஸ்வாமி. விளையாட்டின் மீதான குடும்பங்களின், சமூகத்தின் பார்வையையும் மாற்றியவர்.

குறிப்பாக 2002 முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சர்வதேச ஒருநாள்
போட்டிகளில் வெளிநாடுகளில் மட்டுமே 100 விக்கெட்டுகளை ஜூலன் கோஸ்வாமி வீழ்த்தியுள்ளார்.

2005 மற்றும் 2006ஆம் ஆண்டு இவருடைய கிரிக்கெட் வாழ்வில் ஒரு பொற்காலம் எனலாம். குறிப்பாக 3 மற்றும் 3க்கும் குறைவான எகானமி விகிதத்திலேயே பந்துவீசி 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் கோஸ்வாமி.

டெஸ்ட் போட்டிகளில், ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இளம் வீராங்கனை, அதிக எண்ணிக்கையிலான எதிரணி பேட்டர்களை 0 ரன்னில் வெளியேற்றிய முதல் பந்துவீச்சாளர், அதிக LBW விக்கெட்டுகள் எடுத்த முதல் வீராங்கனை என்ற பல பெருமைகள் கோஸ்வாமியின் கைகளை இருகப் பற்றிக்கொண்டுள்ளது.

மகளிர் கிரிக்கெட்டில் ஒரு சாம்ராஜ்ஜியத்தின் முதலும் தொடக்கமுமாக விளங்கிய கோஸ்வாமி, இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகளுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

கால்பந்து நட்சத்திரம் மரடோனாவின் ரசிகையான ஜூலன் கோஸ்வாமி, அவரது பிரிவை
மனதில் வைத்து, தனது டி சர்டில் 10 ஆம் நம்பர் பதிக்கச் செய்து இன்று அந்த எண்ணிற்கும், அவருக்குமான மரியாதையை உலகறியச் செய்ததோடு, தவிர்க்க முடியாத ஒரு பெயராக விடைபெற்றார்.

கோடிக்கணக்கான இதயங்களின் நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில், கோஸ்வாமியின் நினைவுகளும் இனி வலம் வரும் என்பதே அவரது ஓய்வுக்கு கிடைத்த திருப்தி!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இலங்கை கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது!

Vandhana

வைரலாகும் நீலகிரி கரடிகளின் வீடியோ

”இளையராஜா எனும் நான்”- ராஜ்யசபாவில் ஒலித்த இசை ராஜாவின் குரல்

Web Editor