அதிமுக-வின் ஒரே நம்பிக்கை எடப்பாடி பழனிசாமி – நியூஸ் 7 தமிழுக்கு ஆர்.பி.உதயகுமார் பேட்டி

அதிமுகவின் ஒரே நம்பிக்கை, உலகத் தமிழர்களின் பாதுகாவலர் எடப்பாடி பழனிச்சாமி என நியூஸ் 7 தமிழுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேட்டியளித்துள்ளார்.   விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மஹாளய அமாவாசையையொட்டி…

அதிமுகவின் ஒரே நம்பிக்கை, உலகத் தமிழர்களின் பாதுகாவலர் எடப்பாடி பழனிச்சாமி என நியூஸ் 7 தமிழுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேட்டியளித்துள்ளார்.

 

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மஹாளய அமாவாசையையொட்டி சாமி தரிசனம் செய்ய வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் நியூஸ்7 தமிழுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை தோலுரிக்கும் விதத்தில் எடப்பாடி பழனிச்சாமி சூராவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்றார்.

 

பொதுமக்களிடம் திமுக அரசின் நடவடிக்கைகைளை எடுத்துரைக்கும் விதத்தில் வரும் 29-ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் மற்றும் மதுரை மாவட்ட பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். அதிமுகவின் ஒரே நம்பிக்கை உலகத் தமிழர்களின் பாதுகாவலர் எடப்பாடி பழனிசாமிதான். அவருக்கு தென் மண்டலம், பாண்டிய மண்டலம், கொங்கு மண்டலம் என்ற வேறுபாடு கிடையாது.

பொதுக் குழு கூட்டம் நடத்தி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எந்த விதமான தடையும் கிடையாது. விரைவில் பொதுக்குழு நடைபெறும். கடைக் கோடியில் கொடி ஏற்றிய அதிமுக தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வர முடியும் என்பதற்கு பல சாட்சிகள் உள்ளது அதில் நானும் ஒருவன் என அவர் தெரிவித்தார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.