சென்னை போரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் வழக்குரைஞர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
போரூர் உதயா நகர் பேஸ் 2 பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன்(55), மருந்தக
கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் கடந்த வாரம் வீட்டை
பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்ற நிலையில் ,அவரது வீட்டின்
பூட்டை உடைத்து 80 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை தீவிரமாக கண்காணித்து வந்த போது வில்லிவாக்கத்தை சேர்ந்த சூர்யா(32), தாமஸ்(24), வக்கீல் வினோத்(35), ஆகிய மூன்று பேர் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய போது, வீடு பூட்டி இருப்பது அறிந்து வீட்டிற்குள் நுழைந்த சூர்யா வீட்டின் பீரோவின் பூட்டை உடைத்து அங்கு இருந்த நகைகளை எடுத்து சென்றது தெரியவந்தது. மேலும் கைரேகை பதிவாகாமல் இருக்க கையுறைகளை அணிந்து கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மூன்றுபேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 50 சவரன் நகைகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் கொள்ளை அடித்த நகைகளை அவரது நண்பரான வக்கீல் வினோத்திடம் கொடுத்த நிலையில் போலீசார் அவரையும் கைது செய்ததுள்ளனர். கைது செய்யப்பட்ட சூர்யா மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.







