29 C
Chennai
December 9, 2023
முக்கியச் செய்திகள் உலகம்

பிரிட்டன் மன்னர் சார்லஸ்…விமான பைலட் முதல் அரசர் வரை…!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்குப்பின் மன்னராக மூன்றாம் சார்லஸுக்கு முடிசூட்டு விழா நாளை நடைபெற உள்ள நிலையில், அவர் கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்… 

இங்கிலாந்தில் அரியணை ஏறும் மிக வயதான நபர் மூன்றாம் சார்லஸ் (சார்லஸ் பிலிப் ஆர்தர் ஜார்ஜ்) ஆவார். 74 வயது நிரம்பிய மன்னர் மூன்றாம் சார்லஸ் 1948 நவம்பர் மாதம் 14 ஆம் தேதி பக்கிங்ஹாம் அரண்மனையில் அவரது தாய்வழி தாத்தா ஆறாம் ஜார்ஜ் ஆட்சியின் போது பிறந்தார். சார்லஸின் தாத்தா 1952 இல் இறந்தார், அதன் பிறகு மூன்றாம் சார்லஸின் தாயார் இரண்டாம் எலிசபெத் அதே ஆண்டில் அரியணை ஏறினார். அப்போது சார்லஸிக்கு வயது 3. அந்த சமயமே மூன்றாம் சார்லஸ் அரியணையின் வாரிசாக அறிவிக்கப்பட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அவர் சீம் மற்றும் கோர்டன்ஸ்டொன் பள்ளிகளில் கல்வி பயின்றார், பின்னர் ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள கீலோங் இலக்கணப் பள்ளியின் டிம்பர்டாப் வளாகத்தில் பயின்றார். இவர் குழந்தை பருவத்தில் இருந்து அரண்மனையில் வளர்ந்தாலும், பாரம்பரிய முறைப்படி இவர் தனது கல்வியை அரண்மனையில் கற்காமல் பள்ளிக்கு சென்று பயின்றார். பின் 1970-ம் ஆண்டில் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரிக்கு சென்று வரலாற்று பாடத்தில் பட்டம் பெற்றார். பல்கலைகழகத்திற்கு சென்று பட்டம் பெற்ற அரசு குடும்பத்தைச் சேர்ந்த முதல் நபர் மூன்றாம் சார்லஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்பின் இங்கிலாந்து விமானப்படையில் சேர்ந்து பைலட்டாக 7 ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின் கடற்படையில் ஹெலிகாப்டர் பைலட்டாக பணியாற்றினார். இங்கிலாந்து கடற்படையின் எச்எம்எஸ் பிரானிங்டன் என்ற கண்ணிவெடி அகற்றும் கப்பலின் கமாண்டராக 1971 முதல் பணியாற்றி 1976-ம் ஆண்டு ஓய்வும் பெற்றார்.

சார்லஸ் இளவரசராக இருந்தபோது அவருக்கு காதல் தோல்வி அனுபவங்களும் ஏற்பட்டன. தற்போது அவரது இரண்டாவது மனைவியாக இருக்கும் கமீலாவை, சார்லஸ் முதலில் காதலித்தார். ஆனால் இந்த காதல் வெற்றிபெறவில்லை. அதன்பின் அமண்டா நாட்ச்புல் என்பவரை மன்னர் சார்லஸ் விரும்பினார். ஆனால் அவரும் சார்லஸை நிராகரித்தார்.

பின் 1981-ம் ஆண்டு சார்லஸ்-டயானாவை சந்தித்து தனது காதலை வெளிப்படுத்தினார். டயானா காதலை ஏற்றுக் கொண்ட பின், இவர்களது திருமணம் 1981-ல் நடந்தது. பின் 1982-ல் முதல் குழந்தை இளவரசர் வில்லியமும், இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி 1984-லும் பிறந்தார்கள். சில ஆண்டுகளுக்கப் பின் சார்லஸ்-டயானா உறவில் விரிசல் ஏற்பட்டது. சார்லஸின் முன்னாள் காதலி கமீலாதான் இந்த பிரிவுக்கு காரணம் என கூறப்பட்டது.

1992-ம் ஆண்டு சார்லஸ்-டயானாவை இருவரும் பிரிந்து 1996-ல் விவாகரத்து பெற்றனர். 1997-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த கார் விபத்தில் டயானா உயிரிழந்தார். 2005-ம் ஆண்டு முன்னாள் காதலி கமீலா பார்க்கர் பவுல்ஸை இளவரசர் சார்லஸ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

2010-ம் ஆண்டு இந்தியாவின் டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் மூன்றாம் சார்லஸ் ராணி எலிசபெத்துக்கு பிரதிநிதியாக கலந்து கொண்டார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்குப்பின், அரியணை ஏறும் நபராகவும், காமன்வெல்த் தலைவராகவும் இளவரசர் சார்லஸ் 2018-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டார். ராணி இரண்டாம் எலிசபெத்  2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மறைந்தார். இங்கிலாந்தின் சம்பிரதாயப்படி, அடுத்த 24 மணி நேரத்தில் இளவரசர் சார்லஸை மன்னராக லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையின் அசெஷன் கவுன்சில் அறிவித்தது.

தற்போது அவர் இங்கிலாந்து மன்னராகியுள்ளார். இங்கிலாந்தின் மன்னராக்கிய சார்லஸ் 800 க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர் அல்லது உறுப்பினராக உள்ளார்.

தனது 73 வயதில், பிரிட்டிஷ் வரலாற்றில் வேல்ஸ் இளவரசராக நீண்ட காலம் பணியாற்றிய வாரிசாக இருந்து, பிரிட்டிஷ் சிம்மாசனத்தில் சேர்ந்த மூத்த நபர் மன்னர் மூன்றாம் சார்லஸ். அவரது முடிசூட்டு விழா 6 மே 2023 அன்று நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy