முறையான குடிநீர் வழங்கக் கோரி குடியிருப்பு மொட்டை மாடி மீது ஏறி கருப்புக்கொடி போராட்டம்!

வேலூரில் குடிசை மாற்று வாரியத்தின் அடுக்கு மாடி குடியிருப்பு வாசிகள்  முறையான குடிநீர் வசதி வேண்டி மொட்டை மாடியில் கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்தினர். வேலூர் மாநகருக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் பின்புறம்…

வேலூரில் குடிசை மாற்று வாரியத்தின் அடுக்கு மாடி குடியிருப்பு வாசிகள்  முறையான குடிநீர் வசதி வேண்டி மொட்டை மாடியில் கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்தினர்.

வேலூர் மாநகருக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் பின்புறம் டோபி கானா
பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு அரசு குடிசை மாற்று வாரியத்தின் கீழ்
அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு தற்போது அதில் 250 குடும்பத்தினர்
வசித்து வருகிறனர்.

இந்த நிலையில், குடியிருப்பு பயன்பாட்டுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்த
நிலையில் முறையான குடிநீர் உட்பட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் அரசு செய்து
தரவில்லை என்றும், இது சம்பந்தமாக நகர்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரிய
அதிகாரிகள், மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரை சந்தித்து முறையிட்டும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கப்படாதததால் குடியிருப்பு வாசிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டி குடியிருப்பில் வசித்து
வருபவர்கள் குடியிருப்பு மொட்டை மாடி மீது ஏறி கருப்புகொடி ஏந்தி கண்டன
பேராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சு ஈடுபட்ட பின்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.