சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கிய கள்ளழகரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் கோவில் வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில் விழாவில் முக்கிய நிகழ்ச்சியான வைகையாற்றில் வீர அழகர் இறங்கும்
விழா இன்று நடைபெற்றது. இதற்காக நேற்று இரவு வீர அழகர் கோயில் அருகே எதிர்சேவை மண்டகப்படி நடைபெற்றது.
இன்று அதிகாலை வீர அழகருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு சுவாமி
வீதி உலா வந்து பின்னர் ஆனந்தவல்லி அம்மன் கோவில் எதிரே வைகை ஆற்றில் மக்கள்
வெள்ளத்தில் பச்சை பட்டு உடுத்தி வெள்ளை குதிரை வாகனத்தில் வீர அழகர்
கள்ளழகர் இறங்கினார்.
அப்போது அங்கு குழுமியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என
கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து சுவாமிகள் வீர அழகர் கோயில் அருகே
அமைக்கப்பட்டிருந்த ஆயிரம் பொன் சப்பரத்திற்கு எழுந்தருளினார்.
அங்கிருந்து ஏராளமான பக்தர்கள் சப்பரத்தை வடம் பிடித்து இழுத்து வந்து,
பின்னர் சுவாமிகள் அப்பன் பெருமாள் கோவில் மண்டகப்படிக்கு சென்றடைந்தார்.







