கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி-ன் இறுதி பாகம் வெளியானது – ரசிகர்கள் அதிர்ச்சி!

கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி பாகம் 3 – காவியமான மார்வெல் திரைப்படத்தின் இறுதி அத்தியாயத்தை திரையரங்குகளில் பார்க்க திட்டமிட்டுள்ளீர்களா? படத்தைப் பற்றி சமூக ஊடகங்களில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று பார்க்கலாம். இந்த ஆண்டின்…

கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி பாகம் 3 – காவியமான மார்வெல் திரைப்படத்தின் இறுதி அத்தியாயத்தை திரையரங்குகளில் பார்க்க திட்டமிட்டுள்ளீர்களா? படத்தைப் பற்றி சமூக ஊடகங்களில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று பார்க்கலாம்.

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி-ன் இறுதி அத்தியாயம் இன்று திரையரங்குகளில் வெளியானது. கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி பாகம் 3 படத்தை ஜேம்ஸ் கன் இயக்கியுள்ளார். ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு உட்பட இந்தியாவில் நான்கு மொழிகளில்  இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே உலகம் முழுக்க பிரம்மாண்டமான ரசிகர் பட்டாளத்தை கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி பாகம் 1 மற்றும் 2 படங்கள் உருவாக்கியிருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த காவியத்தின் ஹீரோக்களின் பயணத்தை நிறைவு செய்யும் விதமாக பாகம் 3 அமைந்துள்ளதால் ரசிகர்களுக்கு இது கவலையளிக்கும் விதமாக அமையும் என முன்னரே எதிர்பார்க்கப்பட்டது.

மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்து வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மற்றும் மோஷன் பிக்சர்ஸால் வெளியிடப்பட்டது இந்த படம். மார்வெல் காமிக்ஸை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தின் இறுதி பாகத்தில் கிறிஸ் பிராட், ஜோ சல்டானா, டேவ் பாடிஸ்டா, கரேன் கில்லான், போம் க்ளெமென்டிஃப், வின் டீசல், பிராட்லி கூப்பர், சீன் கன், பக்கலோவா மற்றும் சில்வெஸ்டர் ஸ்டலோன், சுக்வுடி இவுஜி, வில் பால்டர், எலிசாப்ட், எலிசாப், எலிசாப் போன்ற நடிகர்கள் உள்ளனர்.

கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸியின் 3-ம் பாகம் பற்றிய விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் குறிப்பாக ட்விட்டரில் தொடர்ந்து பதிவிடப்படுகின்றன. இந்த படம் மிகவும் எமோசனலாகவும், கண்ணீர் வரவழைக்கிறது என்றும் பதிவிட்டு வருகின்றனர். வில்லன் பயங்கரம் பற்றி சொல்லவே வேண்டாம். என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

மேலும் “இதயப்பூர்வமான, இருண்ட, வசீகரிக்கும் மற்றும் நேர்மையான, இது ஒரு உன்னதமான அனுபவமாகும், இது உங்கள் உணர்ச்சிகளை நகர்த்தவும், உங்கள் கண்ணீரை பாய்ச்சவும் செய்யும்.” என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய திரைப்படத் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கன், இந்தப் படம் தான் இதுவரை எழுதியதில் மிகவும் கடினமான படம் என்று கூறினார். மேலும் “இது நிச்சயமாக நான் எழுத வேண்டிய கடினமான ஸ்கிரிப்ட். காரணம், இந்த கதாபாத்திரங்களை நான் முழு மனதுடன் நேசிக்கிறேன், மேலும் இது இறுதி அத்தியாயம் என்பதால், ஒவ்வொரு கதாபாத்திரமும் முழு திருப்திகரமான முடிவை கொண்டிருப்பதை நான் உறுதிப்படுத்த வேண்டும். ” என்றார் இயக்குனர்.

ஜேம்ஸ் கன் இந்தியா மீதான தனது ஈர்ப்பைப் பற்றியும் பேசினார், மேலும் ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ மற்றும் இந்தியப் படங்களுக்கு இடையிலான ஒற்றுமைகள் குறித்தும் பேசினார். “நான் இந்திய கலாச்சாரம் மற்றும் இந்திய திரைப்படங்களை விரும்புகிறேன். இந்திய திரைப்படங்கள் நகைச்சுவை, நாடகம் போன்ற பொழுதுபோக்கின் ஒவ்வொரு அம்சத்தையும் தழுவிய இசையமைப்பைக் கொண்டிருப்பதை நான் விரும்புகிறேன்” என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.