தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் ஊராட்சி, சண்முகா நகர் பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஒரு மாத காலமாக குடியிருப்புகள், வீடுகள் மற்றும் கடைகள் உள்ள பகுதிகளில் குரங்குகள் புகுந்து விடுவதால் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சிறுவர்கள், சிறுமிகள் வெளியில் செல்லும் போது குரங்குகள் துரத்தி வருவதால் குழந்தைகள் அச்சமடைந்து உள்ளனர்.
தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீருக்காக மலை பகுதியில் இருந்து அதிகப்படியான குரங்குகள் ஊருக்குள் புகுந்து பொது மக்களுக்கு தொல்லை தந்து தருவதால் வனத்துறையினர் உடனடியாக குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
—கோ. சிவசங்கரன்.







