திருச்சி தில்லைநகர் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனத்தில் வீலிங்
செய்து பொது மக்களுக்கு தொந்தரவு கொடுத்ததோடு அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டு வைரல் செய்த இளைஞருக்கு ரூ.11,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருச்சி தில்லைநகர் நீதிமன்றம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுப்ரமணியபுரம்
பகுதியை சேர்ந்த இளைஞர் அசார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக
இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த்ததுடன் அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டா மற்றும் யூ-டியூபில் வெளியிட்டு இருந்தார். சாலையில் பொது மக்களுக்கும்
போக்குவரத்திற்கும் இடையூறு செய்யும் வகையில் அந்த வீடியோ இருந்தது.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி சமூக வலைதளங்களில் பதிவிடும் அசார் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது – அனுமதி இல்லாமல் கூடி ஊர்வலம் சென்றது, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை இயக்குவது, மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய நீதிமன்றம், அசாருக்கு ரூ.11,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.







