பெரியகுளத்தில் 62 ம் ஆண்டு அகில இந்திய கூடைபந்தாட்ட போட்டியின் லீக் சுற்றுப் போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன.
தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் சுழல் கோப்பை 62 வது அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டியின் நான்காவது நாளாக நடைபெற்றது. இதில் முன்னதாக முதல் போட்டியில் புதுடெல்லி ஓ என் ஜி சி அணியும் புனே கஸ்டம்ஸ் அணியும் மோதியதில் புனே கஸ்டம்ஸ் அணி 66க்கு 59 என்ற புள்ளிக் பெற்று வெற்றி
இதனை தொடர்ந்து இரண்டாவதாக நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு சிறப்பு காவல்துறை அணியும் பெங்களூரு பேங்க் ஆப் பரோடா அணி விளையாடிதில் பேங்க் ஆப் பரோடா அணி 82 க்கு 60 என்ற புள்ளிகள் பெற்று வெற்றிபெற்றது
மேலும் மூன்றாவது போட்டியில் கேரளா காவல்துறை அணியும் இந்திய கப்பல் படை லோனோ வாலா அணியும் மோதியதில் இந்திய கப்பல் படை லோனோ வாலா அணி 79க்கு 75 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று நடைபெற்ற நாக்அவுட் போட்டியில் வெற்றிபெற்ற அணிகள் லீக் சுற்றிக்கு தகுதிபெற்ற அணிகள் இன்று முதல் லீக் சுற்றுபோட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடைப்பந்தாட்ட போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார். மேலும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு நினைவு பரிசு வழங்கி உடன் திமுக பெரியகுளம் நகரச்செயலாளர் முகமது இலியாஸ் பாண்டி மற்றும் கட்சி நிர்வாகிகள் கூடைப்பந்தாட்ட போட்டியை கண்டு களித்தனர்.







