சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 4 கூடுதல் நீதிபதிகள் – குடியரசு தலைவர் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க கடந்த…

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க கடந்த மார்ச் மாதம் கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக அந்த பரிந்துரை மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து மத்திய சட்ட அமைச்சகம் கொலிஜியம் பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது.

இந்நிலையில்,  பரிந்துரையை ஏற்றுக் கொண்டு நான்கு பேரையும் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.