இளைஞர்களை கவரும் ‘மாடர்ன் லவ் சென்னை’ – எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?…

மாடர்ன் லவ் சென்னை தொடர் வெளியாகி இளைஞர்களிடம் இப்படம் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இது குறித்து ரசிகர்கள் கூறும் கருத்துக்களை தற்போது பார்ப்போம். கடந்த 2019-ஆம் ஆண்டு அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி…

மாடர்ன் லவ் சென்னை தொடர் வெளியாகி இளைஞர்களிடம் இப்படம் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இது குறித்து ரசிகர்கள் கூறும் கருத்துக்களை தற்போது பார்ப்போம்.

கடந்த 2019-ஆம் ஆண்டு அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற வெப் தொடர் ‘மாடர்ன் லவ்’. ஆன்தாலஜி தொடராக உருவாக்கப்பட்ட இதன் இந்திய பதிப்பான ‘மாடர்ன் லவ் – மும்பை’ கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ’மாடர்ன் லவ்’ தொடரின் சென்னை அத்தியாயம் நாளை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தொடரில் பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார், அக்‌ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகிய ஆறு இயக்குநர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

இந்தத் தொடருக்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் இசையமைத்துள்ளனர். பாடல்கள் இளையராஜா, யுகபாரதி மற்றும் பாக்கியம் சங்கரால் எழுதப்பட்டுள்ளன. இத்தொடரில் ஆறு அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் இத்தொடர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக இளைஞர்களிடம் இப்படம் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இது குறித்து ரசிகர்கள் கூறும் கருத்துக்களை தற்போது பார்ப்போம்.

https://twitter.com/c_userfriendly/status/1659436369616453632?s=20

 

https://twitter.com/jos_satz/status/1659428128463413250?s=20

https://twitter.com/Itsz_Sri/status/1659423561042526209?s=20

https://twitter.com/FieryRedPrince/status/1659291061125251072?s=20

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.