திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக அமைந்துள்ளது பச்சைமலை – கடல் மட்டத்திலிருந்து 700 மீட்டர் உயரத்தில்
அமைந்துள்ள இந்த மலையில் பழங்குடியின மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக
கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
இந்த ஆண்டு கோடைக்காலம் துவங்கியது முதலே பச்சைமலை துறையூர் சுற்றுவட்டார
பகுதிகளில் தொடர்ந்து இடைவிடாது இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது . தொடர் கனமழையால் மங்கலம் அருவியில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.வெயில் காலம் துவங்கியதில் இருந்தே இங்கு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
உப்பிலியபுரம் பகுதியில் இருந்து டாப் -செங்காட்டுப்பட்டி வரை சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளதால் தங்கு தடையற்ற போக்குவரத்து அமைந்துள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.







