டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக எம்ஜி கார்கள்: இந்த மலிவு விலையில் இவ்வளவு அம்சங்களா?

எம்ஜி இந்தியா நிறுவனம் அண்மையில் 2-வது எலெக்ட்ரிக் காரை  அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எம்ஜி காமெட் எலெக்ட்ரிக் கார்கள் டாடா நிறுவனத்தின் டியாகோ கார்களுக்கு வலுவான போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த இரண்டு கார்களின்…

எம்ஜி இந்தியா நிறுவனம் அண்மையில் 2-வது எலெக்ட்ரிக் காரை  அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எம்ஜி காமெட் எலெக்ட்ரிக் கார்கள் டாடா நிறுவனத்தின் டியாகோ கார்களுக்கு வலுவான போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த இரண்டு கார்களின் விலை மற்றும் சிறப்பம்சங்களை கீழே காண்போம்.

சமீபத்தில் எம்ஜி இந்தியா நிறுவனம் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது இந்தியாவின் மிகவும் மலிவான விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் வகை கார்கள் என அந்நிறுவனம் கூறியுள்ளது. “கோமெட்” என அழைக்கப்படும் இந்த கார்கள் பிரபல கார் நிறுவனமான டாடா வின் டியாகோ எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.

டியாகோ எலெக்ட்ரிக் கார்கள் தற்போது இந்தியாவில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. டாடா நிறுவனம் சமீபத்தில் 10,000 டியாகோ கார்களை தன் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளது. 2022-ம் ஆண்டு டிசம்பரில் 20,000 முன்பதிவுகளை பெற்றது. மேலும் 24 மணி நேரத்தில் அதிகமாக 10,000 முன்பதிவுகளை பெற்ற காராக டாடா டியாகோ கார் அமைந்தது.

இந்த இரண்டு கார்களும் முற்றிலும் வேறுபட்ட வடிவமைப்புடன் உள்ளன. டியாகோ கார்கள் வழக்கமான ஹேட்ச்பேக்கை அமைப்பை அடிப்படையாகவும், எம்ஜி காமெட் கார்கள் சிறிய வகை ஹேட்ச்பேக் அமைப்புடனும் இரண்டு இருக்கைகளையும் மட்டுமே கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை எம்ஜி காமெட்டானது பேட்டரி ஒப்பீட்டில் மிகச்சிறிய பேட்டரி பேக்கைப் பெறுகிறது, அதன் 17.3 kWh யூனிட் ஒருமுறை சார்ஜ் செய்தால் 230 கிமீ வரை செல்லக்கூடியது. டியாகோ இரண்டு வெவ்வேறு பேட்டரி பேக்குடன் 19.2 kWh மற்றும் 24 kWh யூனிட்டுடனும், இதன்படி 230 மற்றும் 315 கிமீ வரை செல்லக்கூடியதாக உள்ளது.

விலையை பொறுத்தவரை டாடா டியாகோ கார் ரூ 8.69 முதல் 11.99 லட்சம் வரையிலும், எம்ஜி காமெட் ரூ 7.98 முதல் 9.98 லட்சம் வரையிலும் சந்தையில் வலம் வருகிறது.

மேலும் எம்ஜி காமெட் கார்களின் முன்பதிவை மே 15-ம் தேதி முதல் ஆரம்பிப்பதாகவும், மே 22-ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.