வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என கூறப்பட்டுள்து. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்சமாக 30 டிகிரியும், குறைந்தபட்சபாக 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் காணப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், குமரி கடல் பகுதியில் இன்றும், நாளையும் பலத்த சூறாவளி காற்று வீசவுள்ளதால், அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, வரும் 22ஆம் தேதி மாலத்தீவு பகுதியில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.







