“கூட்டணிக்கு குழப்பம் விளைவிக்கும் வகையில் பேசினால் முருகனை அக்கட்சியின் தலைமை நீக்க வேண்டியிருக்கும்” – அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி

கூட்டணிக்கு குழப்பம் விளைவிக்கும் வகையில் பேசினால், பாஜக மாநிலத் தலைவர் முருகனை, அக்கட்சியின் தலைமை நீக்க வேண்டியிருக்கும் என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

கூட்டணிக்கு குழப்பம் விளைவிக்கும் வகையில் பேசினால், பாஜக மாநிலத் தலைவர் முருகனை, அக்கட்சியின் தலைமை நீக்க வேண்டியிருக்கும் என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அக்டோபர் மாதமே எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அதிமுக தலைமை அறிவித்துவிட்டது என்றார். ஆனால், முதல்வர் வேட்பாளரை பாஜக அறிவிக்கும் என கூட்டணிக்கு குழப்பம் விளைவிக்கும் வகையில் முருகன் பேசினால் அவரை பாஜக தலைமையே நீக்க வேண்டியிருக்கும் எனவும் கூறினார்.

மேலும், ஓய்வில்லாமல் உழைத்த எம்ஜிஆருடன் யாரையும் ஒப்பிட முடியாது என்றும், கமல்ஹாசன் தன்னை எம்.ஜி.ஆர் உடன் ஒப்பிட்டு கூறுவதா எனவும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், தினகரன் தலைமையிலான அரசியலில் சசிகலா ஈடுபடமாட்டார் என்றும், அடுத்த மாதம் விடுதலையான பின்பு அவரின் அரசியல் நிலைப்பாடு தெரியவரும் என புகழேந்தி குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply