மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பூத்து குலுங்கும் ஓர் புதுவகையான தாவரத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பூத்திருக்கும் அர்ஜ்ரேயா (Argyreia) என்ற ஓர் புதுவகையான பூவிற்கு ‘அர்ஜ்ரேயா சந்தரஜி’ (Argyreia sharadchandrajii) எனத் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சரத் பவார் (2004 – 2014) மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சராக இருந்தபோது, அவர் அந்த துறையில் ஆற்றிய பணிகளை பாராட்டும் விதமாகவும் மேலும் அவரது பணியை மக்கள் என்றென்றும் நினைவுகூருவதற்காகவும் இந்த தாவரத்திற்கு இவர் பெயரிடப்பட்டுள்ளது.
பெரும்பாலும் அர்ஜ்ரேயா பூக்கள் ஆசியக் கண்டத்தில் உள்ள நாடுகளில் பூக்கும் எனக் கூறப்படுகிறது. தற்போது இந்த அறியவகை மலர்கள் கோலாப்பூரில் ஐயாயிரத்துக்கும் அதிகமாகப் பூத்திருக்கிறது.