டெல்லியில் போராடும் விவசாயிகள் குரலுக்கு செவி சாய்த்து, அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என நடிகர் கார்த்தி கோரிக்கை வைத்துள்ளார்.
உழவன் அறக்கட்டளை வாயிலாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் சட்டங்களால் மிக மோசமாக பாதிப்படைவோம் என விவசாயிகள் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். விளை பொருட்களின் சந்தை அதிகாரம், பெரு முதலாளிகளின் கைகுளுக்கு சென்றுவிடும் என விவசாயிகள் அஞ்சுவதாக குறிப்பிட்டுள்ள கார்த்தி, இந்த சட்டங்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதே விவசாயிகளின் வேண்டுகோளாக இருப்பதாகக் கூறினார்.
மேலும் கடும் பனியையும், கொரோனா அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து உழவர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதனை மத்திய அரசு தாமதிக்காமல் செய்ய வேண்டும் என்றும் நடிகர் கார்த்தி வலியுறுத்தியுள்ளார்.







