சட்டமன்ற தேர்தல்: அதிமுக நிர்வாகிகளுடன் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இன்று முக்கிய ஆலோசனை!

சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை, கூட்டணி விவகாரங்கள் தொடர்பாக அதிமுக தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கின்றனர். தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில், முதலமைச்சர்…

சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை, கூட்டணி விவகாரங்கள் தொடர்பாக அதிமுக தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இந்நிலையில்,
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் முக்கிய ஆலோசனை மேற்கொள்கின்றனர். இந்த ஆலோசனையில், சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை, கூட்டணி விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply