கோமுகி அணை வாய்க்காலை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்!

கள்ளக்குறிச்சி அருகே கோமுகி அணை வாய்க்காலை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கோமுகி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர், நீலமங்கலம் வாய்க்கால் வழியாக நிறைமதி பெரிய ஏரியை…

கள்ளக்குறிச்சி அருகே கோமுகி அணை வாய்க்காலை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கோமுகி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர், நீலமங்கலம் வாய்க்கால் வழியாக நிறைமதி பெரிய ஏரியை வந்தடைகிறது. இந்நிலையில், வாய்க்கால் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, தூர்ந்துபோனதால், கோமுகி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட 1,500 கன அடி நீர் நிறைமதி ஏரிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிராம மக்களின் சாலை மறியல் குறித்து அறிந்து வந்த கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஏரிக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply