கர்நாடக துணை சபாநாயகர் ரயில் முன் பாய்ந்து உயிரிழப்பு ; விசாரணை தீவிரம்!

கர்நாடக மாநில துணை சபாநாயகர் தர்மே கவுடா ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்டமேலவை கூட்டத்தொடரின் போது பசுவதை தடுப்பு சட்டத்தை பாஜக அரசு தாக்கல்…

கர்நாடக மாநில துணை சபாநாயகர் தர்மே கவுடா ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக சட்டமேலவை கூட்டத்தொடரின் போது பசுவதை தடுப்பு சட்டத்தை பாஜக அரசு தாக்கல் செய்ய முயற்சித்தது. அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சபாநாயகர் தனது இருக்கையில் அமர மறுத்துவிட்டார். அதனால் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த துணை சபாநாயகரான தர்மே கவுடா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார். இதனால் ஆத்திரமடைந்த சட்டமேலவை உறுப்பினர்கள் அவரை சபாநாயகர் இருக்கையில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார்.

இந்நிலையில் அவர் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்
கொண்டார். அவரது உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது உடலுக்கு அருகே  உயிரிழப்பு கடிதமும் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது உயிரிழப்புக்கான காரணம் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை. அவர் திடீரென நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறியதாகவும், நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துணை சபாநாயகர் உயிரை மாய்த்துக்உயிரை மாய்த்துக்

கொண்டது அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply