’அரசியலுக்கு வர முடியவில்லை’- நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஜனவரி மாதத்தில் புதிய கட்சியை தொடங்கவிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்த ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஜனவரி மாதத்தில் புதிய கட்சியை தொடங்கவிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்த ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவரை, ஒரு வாரம் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதனால் அவர் கட்சி தொடங்குவாரா என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்தது.

இந்நிலையில் இதுதொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரப் போவதில்லை என அறிவித்துள்ளார். இதனை அறிவிக்கும் போது தனக்கு ஏற்பட்ட வலி தனக்கு மட்டும் தான் தெரியும் என்றும் கூறியுள்ளார். கட்சி ஆரம்பிப்பேன் என எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் தன்னை, அனைவரும் மன்னிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு தன்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை செய்யவிருப்பதாகவும் விளக்கமளித்துள்ளார். மூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து தன்னை ஆதரித்த தமிழருவி மணியனுக்கும், ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியில் இருந்து விலகி வந்து பணியாற்ற சம்மதித்த அர்ஜூன மூர்த்திக்கும் ரஜினிகாந்த் நன்றி கூறியுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது. எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை ஆண்டவன் எனக்கு கொடுத்த எச்சரிக்கையாக பார்க்கிறேன். இதனால் அண்ணாத்த படக்குழுவில் பணியாற்றிவர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்றத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டனர். அவர்களது சேவை வீண்போகாது. ரஜினி மக்கள் மன்றம் வழக்கம் போல் செயல்படும்’ என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply